மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து விரிவான ஆய்வு: அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சர்
நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் தொடர்பான ஆய்வொன்றை நடத்தி, அதன்மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கவுள்ளதாக அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வடக்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு 103 அரசாங்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த அரசாங்க அதிகாரிகள் தகவல்களை திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் குறித்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் மற்றும் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களது பிரச்சினைகள் தொடர்பில் குறித்த அரசாங்க அதிகாரிகள் தகவல்களை திரட்டி அமைச்சிற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply