பாகிஸ்தானில் குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி ஒர் அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் பாதுகாப்பு நிறுவனமான பிளக் வோட்டர் (Black water), பாகிஸ்தான் அரசுடன் சேர்ந்து, பொது மக்களை இலக்கு வைத்து குண்டுகளை வெடிக்க வைத்துள்ளது. பாகிஸ்தானில் சமீப காலமாக பொது மக்கள் கூடுமிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளுக்கு தாம் பொறுப்பல்ல என்று தாஹ்ரீக் எ-தாலிபான் அறிவித்துள்ளது.

இஸ்லாமாபாத் இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்களைக் கொன்ற குண்டுவெடிப்பு, மற்றும் பெஷாவர் பொது சந்தையில் நூறு பேர் இறக்க காரணமான குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அந்நிய சக்திகளே காரணம். அமெரிக்காவின் கூலிப்படை நிறுவனமான “Black water “, பாகிஸ்தான் அரசுடன் சேர்ந்து, பொது மக்களை இலக்கு வைத்து குண்டுகளை வெடிக்க வைத்துள்ளது. இவ்வாறு தாஹ்ரீக் எ-தாலிபான் இயக்க பேச்சாளர் அசாம் தாரிக் தெரிவிக்கும் வீடியோ ஒன்றை அல்-கைதா சார்பான இணையத் தளமொன்று வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply