யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக பாதுகாப்புப் பயண அனுமதி முற்றாக நீங்கம்: யாழ்.அரச அதிபர் கே.கணேஷ்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி இன்று முதல் தேவையில்லையென யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப் பயண அனுமதி இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யாழ்.அரச அதிபர் அனுப்பிய செய்திக் குறிப்பில்,” இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கிளியரன்ஸ் நடைமுறை புதன் கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழிலிருந்து கொழும்ப செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடியும்.
மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பாரவூர்திகள் நாவற்குழி அரச களஞ்சிய சாலையில் அனுமதியினைப் பெற்று வாகனத் தொடர் அணியுடன் கொழும்பு செல்ல முடியும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply