`வசந் – பரா` முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிறீ ரெலோவினரால் திருமலையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெற் போட்டி
சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் (Sri – TELO ) `வசந் – பரா` இருவரதும் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருமலை மாவட்டத்தில் இளைஞர்களை வலுவூட்டும் முகமாக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிகெற் போட்டி கடந்த 14ம், 15ம் திகதிகளில் பெரிய முத்தவெளி மைதானத்தில் நடாத்தப்பட்டது. ‘வசந் – பரா` வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெற் போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கு பற்றி விழாவை சிறப்பித்தன.
கொட்டும் மழையிலும் சிரமம் பாராமல் அனைத்து விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஆரம்ப நிகழ்வாக கட்சியின் கொடியை மாவட்ட பொறுப்பாளர் ஜெயம் ஏற்றி வைத்தார். தேசியக் கொடியை அனைத்து மாவட்ட பொறுப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஏற்றினார்.
இந்நிகழ்வில் திருமலை மாவட்டத்தைத் சேர்ந்த பல கிராம சேவையாளர்களும் பங்கு பற்றி வசந் – பரா` வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெற் போட்டியை மேலும் சிறப்பித்தனர்.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவத்தில் முறையே சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை திருமலை மாவட்ட மக்கள் தொடர்புப் பொறுப்பாளர் கஜன், சிறந்த தொடர் வீரருக்கான விருதினை திருமலை மாவட்ட விளையாட்டுத்துறை பொறுப்பாளர் சாறோ, தொடரின் சிறந்த ஒழுக்கமான வீரருக்கான விருதினை திருகோணமலை மென்பந்து கிரிக்கெற் சபைத் தலைவர் யோகராசா, சிறந்த இறுதிப்போட்டி வீரருக்கான விருதினை திருமலை பிரபல வர்த்தகர் நியாஸ் ஆகியோர்கள் வழங்கினார்கள்.
`வசந் – பரா` வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெற் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்ற `யங்கோட் ரேட்` விளையாட்டுக் கழகத்துக்கான விருதினை திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் மோகனும், இரண்டாம் இடத்தை அடைந்த `யங்ஸ் ஒலிம்பிக்ஸ்` விளையாட்டுக் கழகத்துக்கான விருதினை திருமலை மாவட்ட பொறுப்பாளர் ஜெயமும் வழங்கினார்கள்.
`வசந் – பரா` இருவரதும் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ந்த மென்பந்து கிரிக்கெற் போட்டியில் முதலாம் இடத்தை அடைந்த `சோடியா` விளையாட்டுக் கழகத்துக்கு `வசந் – பரா` வெற்றிக் கிண்ணத்தை அனைத்து மாவட்ட பொறுப்பாளர் பி. ஆர் பாண்டியன் வழங்கினார்.
விழாவின் முடிவில் கால் நூற்றாண்டு போரினால் உடல் ஊனமுற்ற சிலருக்கு `வீல்செயர்கள்` வழங்கப்பட்டன.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply