பிரபாகரனைப் பார்த்து சோமவன்ச பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்

தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத் தப்பியோடியவரான சோமவன்ச அமரசிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே விவசாயத்துறை, விவசாயத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிவரை தன் ஆதரவாளர்களுடனேயே இருந்தார். தனது ஆதரவாளர்களை விட்டுச் செல்ல அவர் எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால், ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆபத்துவந்தவுடன் இந்தியா ஊடாக லண்டனுக்குத் தப்பிச் சென்றார். தனது ஆதவராளர்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை என்றும் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply