யாழ். பல்கலைக் கழகத்துக்கு 42.35 மில்லியனில் புதிய கட்டடம்; பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு கலைக்கூடம்

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் பட்டப் பின்படிப்பு கல்விப் பீடத்துக்கு புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி 42.35 மில்லியன் ரூபா செலவில் 600 சதுர மீற்றர் பரப்பளவில் இதற்கான மூன்று மாடிக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இந்தப் பீடத்தில் சுமார் 600 மாணவர்கள் பட்டப் பின்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு கலைக்கூடம்


பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பிரதன நூலகத்தின் கீழ் தளத்தில் கலைக்கூடம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால சமர்பித்திருந்தார்.

இதற்கு 6 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது இவ்வருட இறுதிக்குள் இதன் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வயம்ப மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக வசதிகள்

வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மேலதிக வசதிகளை செய்து கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இவை இரண்டுக்குமான அமைச்சரவைப் பத்திரங்களை சமர்பித்திருந்தார்.

அதன்படி ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய விஞ்ஞான பீடத்துக்கு சிகிச்சை முகாம் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. 10989 சதுரமீற்றர் பரப்பளவில் 673 மில்லியன் ரூபா செலவில் இதற்கான ஆறு மாடிக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

அடுத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஏற்ப வயம்ப பல்கலைக்கழகத்துக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளன.

அதன்படி ,ந்த பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டியவில் உள்ள வணிகக் கல்வி மற்றும் நிதி முகாமைத்துவ பீடத்துக்கு 165 மில்லியன் ரூபா செலவில் 2800 சதுர மீற்றர் நிலப்பரப்பில் நான்கு மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதன் முதல்கட்டம் 30 மில்லியன் ரூபா செலவில் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply