புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி இன்றும் 134 பேர் ஓமந்தை வந்தனர்.

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி 134 பேர் ஏ-9 வீதியூடாக இன்று (நவ. 28)ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 72 ஆண்கள், 62 பெண்கள் அடங்கலாக 51 குடும்பங்களைச் சேர்ந்த   இவர்கள் கனகராயன்குளம், கிழக்கு நெடுங்கேணி, மேற்கு மாங்குளம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனவும் அத்தகவல் கூறுகின்றது.

வன்னியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இதுவரை 424பேர் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு வந்துள்ளனர். மாங்குளம் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்தே தாம் அங்கிருந்து வெளியேறிக்கூடியதாக இருந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழை சற்று குறைவடைந்துள்ளதால் இனி அதிக மக்கள் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறி பாதுகாப்புத் தேடி விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply