தமிழ்க் கூட்டமைப்பு மூன்றாக பிளவுபடுகிறது: சித்தார்த்தன்
தமிழ்க் கூட்டமைப்பு மூன்றாக பிளவுபடுகிறது. அரச சார்பு குழுவொன்று அதில் இருந்து வெளிக்கிளம்பியுள்ளது என்று புளொட் தலைவர் த. சித்தார்த்தன் நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
யுத்த கதாநாயகனான ஜெனரல் சரத் பொன்சேகா ஒன்றுபட்ட எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குவங்கி உடைந்து விடும் என்ற அச்சத்தால் அதனால் ஏற்படும் இழப்புகளை சாத்தியப்பாட்டை ஈடுகட்டுவதற்கு சிறுபான்மை தமிழர்களை கவர்ந்திழுக்கும் முயற்சிகளில் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இப்போது ஈடுபட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க அரசாங்கம் இப்போது முயற்சிக்கிறது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இப்போது குடாநாட்டு தமிழர்கள் பயணம் செய்யமுடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு எதிராக தமிழ் அரசியல்வாதி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். முன்னர் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் குறிப்பாக தமிழ்க் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அகதி முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அந்தத்தடை அண்மையில் நீக்கப்பட்டு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழு அண்மையில் அரச வழிகாட்டலுடன் முகாம்களுக்கு சென்று திரும்பியிருந்தனரெனவும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply