இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தும் திறந்து விடப்படும்: பசில் ராஜபக்ச

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தும் திறந்து விடப்படும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்‌ஷ இன்று அறிவித்துள்ளார். இன்று மெனிக் முகாமில் நடந்த விசேட சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக மாற்றப்படும் எனவும். அதே நேரம் ஜனவரி 31 இற்கு முன்பாக அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விடுவர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு இடம்பெயர் மக்களின் எதிர்காலம் தொடர்பில் இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவிக்க உள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியானது.

வடபகுதி நலன்புரி நிலைங்கள் சிலவற்றுக்கு பசில் ராஜபக்ஷ இன்றைய தினம் விஜயம் செய்ய உள்ளதாகவும், இந்த விஜயத்தைத் தொடர்ந்து அவர்களது எதிர்காலம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்பட உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்னமும் 136,328 பேர் மட்டுமே தங்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்படாது எஞ்சியிருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்ட கிரமங்களில் கடந்தவாரம் ஏழாயிரம் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அநேகமான இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply