இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் : இலங்கை திட்டவட்டம்

இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கச்சத்தீவு விவகாரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசி தீர்வு காணப்பட்டுவிட்டதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை அண்மையில் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸும், திமுகவும் சதி செய்து இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதன்பின் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவை மீட்க இந்தியா அனைத்து விதமான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவிற்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது என்றும் கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலும் சூறையாடப்பட்டுவிடும் என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இதேபோன்று இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, கச்சத்தீவு விவகாரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசி தீர்வு காணப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். எனவே, கச்சத்தீவு தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply