பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்கால சந்ததிக்கு விட்டுச்செல்ல தயாரில்லை
நாட்டின் பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்வதற்கு நான் தயாரில்லை. அதற்கு முற்றுப் புள்ளி வைப்பதே எனது நோக்கமாகும்.
ஒரு இனத்துக்கோ, மதத்திற்கோ எதிராக யுத்தம் செய்யவில்லை. நாட்டை பிரித்து இனங்களிடையே மோதல்களை ஏற்படுத்த முனையும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெயட்ட கிருள (தேசத்துக்கு மகுடம்) கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட சித்திரம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் வைபவம் இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்கு புதிதாக தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. நாட்டை பிரித்து மக்களிடையே பிரச்சினைகளையும் மோதல்களையும் உருவாக்குவதன் மூலம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இனவாத, மதவாதக் கலவரங்கள் இருக்குமானால் நாட்டை அபிவிருத்தி செய்வதால் பலன்கிடைக்காது.
நாடு பிளவுபடுவதை தடுத்து பயங்கரவாதத்தை அடக்கி நாட்டில் அனைத்து இன, மத மக்களும் அச்சமின்றி சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்தவே அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இது எமது கடப்பாடாகும்.நாம் இன்று முகம் கொடுக்கும் பிரச்சினையை உங்களிடம் கையளித்து விட்டுச் செல்லத் தயாரில்லை. பயங்கரவாதத்திலிருந்தும் பிரிவினைவாதத்திலிருந்தும் விடுதலை பெற்ற நாட்டையே உங்களிடம் கையளிக்க வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply