சூரிச் கூட்டம் தொடர்பான முடிவுகள் கூட்டறிக்கையாக வெளியிடப்படும்

இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொது இணக்கப்பாட்டை எட்டும் முயற்சியில் சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் கூட்டத்தின் இறுதி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார். பொது இணக்கப்பாடு குறித்த தீர்மானங்களை தற்போது தம்மால் வெளியிட முடியாது எனவும் அவர் பி.பி.சி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

பொதுவாக சுமூகமான முறையில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்ற போதிலும் சில விடயங்கள் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் கட்சியின் தலைவர் ரவூஃப் ஹக்கிம் மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply