மக்களின் சுதந்திர இடம்பெயர்வு குறித்த தீர்மானம் பாராட்டுக்குரியது

இடம்பெயர் மக்களின் சுதந்திர இடம்நகர்வு குறித்த தீர்மானம் பாராட்டுக்குரியதென பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. வவுனியா இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக இடம் நகர முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதென பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் பொஸ்டர் தெரிவித்தள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் வவுனியா இடம்பெயர் முகாம் மக்கள் சுதந்திரமாக இடம் நகர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இடம்பெயர் முகாம்கள் பாரிய நன்மைகளை அடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யதார்த்தமான இடம் நகரும் சுதந்திரம் மூலம் மக்கள் எங்கு செல்ல வேண்டுமென தாங்களாகவே தீர்மானிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களில் நிவாரணங்களை வழங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றி மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் பூரண ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு மேலதிக நிதி உதவிகளை வழங்க முடியும் என உறுதியளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply