வவுனியா வடக்கில் மீள்குடியமர்த்தும் தினம் பற்றி இன்று முடிவெடுக்கப்படும்

வவுனியா வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு தயார் நிலையிலிருக்கும் ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் அனைத்து உட்கட்டமைப்பு பணிகளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தியாக்கப்படுமென வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மோதல் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப் போரில் முதற் கட்டமாக 300 குடும்பங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் தினம் தொடர்பாக தமது தலைமையில் இன்று கூடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வவுனியா வடக்கிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவுகளில் 06 கிராம சேவகர் பிரிவுகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் மீள்குடி யேற்றத்துக்கு தயார் நிலையிலுள்ளன. இப்பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் துரித கதியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனைத்துப் பணிகளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தியாக்கப்படுவதுடன் அனைத்து அலு வலகங்கள் மற்றும் உப அலுவலகங்களும் இவ்வாரம் முதல் செயற் படுமெனவும் அரசாங்க அதிபர் கூறினார்.

இதேவேளை மேற்படி ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் உள் வீதிகளை புனரமைப்பு செய்வதற் கென உலக வங்கி 25 மில்லியன் ரூபாவினை வழங்கியிருப்பதாகவும் புனரமைப்பு வேலைகள் மும்முர மாக நடைபெற்று வருதாகவும் அவர் மேலும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் நேற்றைய திகதிக்கு ஒரு இலட்சத்து 27 ஆயிரம் பேர் வரையிலானோரையே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள் ளது.

இவர்கள் முல்லைத்தீவு, கிளி நொச்சி, மன்னார் மற்றும் வவுனியா வடக்கைச் சேர்ந்தவர்கள். அனைவரும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மீளக்குடியமர்த்தப் படவுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தோரை விரை வில் மீளக்குடியமர்த்துவதற்கான நட வடிக்கைகளை அரசாங்கம் முன் னெடுத்து வருகிறது.

அந்த வகையில் வவுனியா வடக்கில் மீதமாகவுள்ள 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணிவெடி யகற்றும் பணிகள் துரிதப்படுத்த ப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

அதேவேளை நிவாரணக் கிராமத் திலுள்ள 800 பேர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் மீளக்குடியமர்த்தப்பட விருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவி த்தார்.

கடந்த வாரம் இங்கு 1100 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டமை குறிப் பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply