ரயில் பாதையை அமைக்க இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

`வடக்கின் வசந்தம்` திட்டத்தின் கீழ், யுத்தத்தின் பின்னான புனர்நிர்மானம் துரித கதியில் நிகழ்த்த வேண்டியுள்ளதால்,  ஓமந்தையிலிருந்து பளை வரையான 96 கிலோமீற்றர் ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம், இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் சட்டத் தன்மையை ஆராய்வதற்கென, ஒப்பந்தம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என ரயில்வேத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் பீ.பீ.வி.ஜேசேகர குறிப்பிட்டார்.

ஒப்பந்தம் கைச்சாத்தானதும் இரண்டரை மாதத்தில் இப்பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையுமெனவும் அவர் கூறினார். இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து பளை வரையிலான ரயில்வே பாதையை நிர்மாணிக்க சீன நிறுவனமொன்று முன் வந்துள்ளதென பொது முகாமையாளர் குறிப்பிட்டார். 10 கிலோமீற்றர் நீளமான தாண்டிக்குளம் ஓமந்தை ரயில் பாதையை அமைப்பதற்கு ஏதுவாக இராணுவத்தினர் கண்ணி வெடிகளை அகற்றியுள்ளனர். இதனையடுத்து 7 கிலோ மீற்றர் தூரத்துக்கு ரயில் பாதைக்கான மண் நிரப்பப்பட்டு கற்களும் பரவப்பட்டுள்ளன என முகாமையாளர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply