மலையகத்தில் 60,000 தமிழ் மக்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை
மலையக பகுதிகளில் வசிக்கும் சுமார் 60,000 பேருக்கு அடையாள அட்டைகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் எந்தவொரு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மலையக பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 60,000 தமிழ் மக்களுக்கு அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதென பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை பரிசீலனை செய்த போது இந்தத் தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவது குறித்து பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உரிய ஆவணங்கள் இல்லாத பெருந்தோட்ட மக்களுக்கு நடமாடும் சேவைகளின் மூலம் தமது அமைச்சு ஆவணங்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply