வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு ட்ரக்டர்கள் விநியோகம்
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் தேசிய ரீதியாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொது வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக ஒவ்வொரு பிரதேசத்தையும் இலக்காகக் கொண்ட விசேட வேலைத்திட்டங்கள் சிலவாகும். அவற்றில் வட மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த வீடுகளையும், அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையையும், மக்களுக்கு மிக நெருக்கமான பிராந்திய நிர்வாக அலகான உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்ட வடக்கின் வசந்தம் துரித வேலைத்திட்டத்துக்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு, அதன் அமைச்சர் கெளரவ ஜனக பண்டார தென்னக்கோன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்து வருகின்றது.
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் மூலம் வடக்கின் உள்ளூராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து மக்களுக்குச் சேவை ஆற்றுவதை நோக்காகக் கொண்ட விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ட்ரக்டர் மற்றும் டிரேலர் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் 03 உள்ளூராட்சி மன்றங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் 04 உள்ளூராட்சி மன்றங்களுக்கும், வவுனியா மாவட்டத்தின் 05 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மன்னார் மாவட்டத்தின் 05 உள்ளூராட்சி மன்றங்களுக்குமாக 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கு அமைச்சின் நிதி ஏற்பாடுகளின் கீழ் 34 ட்ரக்ரரும், ட்ரேலர்களும் வழங்கப்பட்டதுடன், அதற்கென ரூபா 39,429,120 செலவிடப்பட்டது.
ஜப்பான் அரசாங்கத்தின் உணவு உற்பத்தி கொடை உதவி வேலைத்திட்டத்தின் 2 றிஞிஎதிரிணை நிதியத்தினால் வழங்கப்படுகின்ற நிதி உதவியின் கீழ் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தினூடாக வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி முகாம்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 65,548,976 பெறுமதிமிக்க ட்ரேலருடன் கூடிய 20 ட்ரக்ரர்களும், 06 சிறு ட்ரக்டர்களும் 02 பெகோ லோடர்களும், 04 டிரம் ட்ரக்டர்களும், 01 ஸ்கீட் ஸ்ரியர் லோடரும், ஒரு சிங்கிள் கெப் வண்டியும், ஒரு டபிள் கெப் வண்டியும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
ஜப்பான் அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்படுகின்ற இந்த உபகரணங்கள் நலன்புரி முகாம்களில் குப்பைகளை அகற்றுதல், நீர், கழிவுநீரைக் கொண்டு செல்லல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன் இதன் மூலம் பூரண சுகாதார செயல்ரீதியான திட்டத்தின் கீழ் நலன்புரி நிலையங்களின் கீழ் சுகாதார நிலைமையை உச்சளவிலும், உற்பத்தி திறனுடனும் பேணிவர பயன்படுத்தப்படும்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு (நியிவிதி) நிறுவனம் வழங்கியுள்ள சாத்தியவள ஆராய்ச்சி செயற்திட்டம் தொடர்பான ஜப்பான் நிபுணர்களின் ஆலோசனைக்குழுவின் உதவியுடன், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி நிலையம் இச்செயற்திட்டத்தின் செயல்ரீதியான திட்டங்களைத் தயார் செய்கின்றது. தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி நிலையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் அமுல்படுத்தப்பட்டுள்ள திண்மக் கழிவுப் பொருள் முகாமைத்துவ வேலைத்திட்டத்தினால் குளியாப்பிட்டிய, நாவலப்பிட்டிய நகர சபைகள் மற்றும் பதுளை, மாத்தறை மாநகர சபைகளுக்கு ரூ. 11,187,200/= பெறுமதிமிக்க 04 ஸ்கீட் ஸ்ரீயர் லோடர்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
வடமாகாணத்தில் ட்ரக்ரர், ட்ரேலர் வண்டிகளைப் பெற்றுக்கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் விபரம் வருமாறு,
யாழ்ப்பாணம் மாநகர சபை, பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை, நல்லூர் பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, வலிகாமம் வடக்குப் பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, ஊர்காவற்றுறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, காரைநகர் பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, கரைத்துறைப்பற்று பிரதேச சபை, வவுனியா நகர சபை, வவுனியா நகர பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச சபை என்பன பயன்பெறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply