பிறந்தநாள் கொண்டாட்டம்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் கென்டகி நகரில் உள்ள ஒரு வீட்டில் 21 வயது இளைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.நேற்று இரவு நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நபர் திடீரென தான் கொண்டுவந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய இளைஞன் அருகில் உள்ள வனப்பகுதியில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞன் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply