இது பரிசோதனைக்குரிய நேரமல்ல
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரொருவரை நிறுத்துவது பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசிப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கின்றது. கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களும் இக் கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இத் தேர்தலில் வேட்பாளரொருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைச் சாதிக்க முயற்சிக்கின்றதென்பது புரியவில்லை. கூட்டமைப்பு நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை.
தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்காகக் குறிப்பான கொள்ளை யொன்றுக்குத் தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகக் களத்தில் இறங்குகின்றது என்றும் கூற முடியாது. ஏனெனில் தீர்வுக்கான கொள்கையெதுவும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை. தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிப்பதாகவும் அது விரைவில் வெளியிடப்படும் என்றும் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறிப் பல மாதங்கள் கழிந்துவிட்டன. இன்னும் அத் தீர்வுத் திட்டம் வெளிப் படுத்தப்படவில்லை.
புலிகளின் பிழையான கொள்கை காரணமாகத் தமிழ் மக்கள் மோசமான இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகியி ருப்பதோடு இனப்பிரச்சினையின் தீர்வுமுயற்சியும் பல தசாப்தங்கள் பின்தள்ளப்பட்டுவிட்டது. புலிகளுடன் இணை ந்து செயற்பட்டவர்கள் என்ற வகையில் கூட்டமைப்பின் செல்வாக்கு சரிந்துவிட்டதா என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கின்றார்களா என்ற கேள்வியும் நியாயமானது. இது அத்தகைய பரிசோதனைக்குரிய நேரமல்ல.
ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டுக்கு அப்பால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்பது இப்போது நிதர்சனமாகிவிட்டது. இத்தீர்வு அரசியலமைப்புத் திருத்தத்துக்கூடாகவே சாத்தியமாகும் என்பதால் சிங்கள மக்களின் ஆதரவும் தேவைப்படுகின்றது. அரசியல் தீர்வு முயற்சியைத் தென்னிலங்கையிலுள்ள முற்போக்கு சக்திக ளுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை இப்போதாவது தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்விடயம் தொடர்பாகக் கடந்த காலங்களில் விட்ட தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
தேசிய நீரோட்டத்திலிருந்து விலகி நின்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. இந்தக் கண்ணோட்டத்திலேயே தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் ஜனாதிபதித் தேர்தலை நோக்க வேண்டும். தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் பங்களிப்பு இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என்பதால் ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கும் முக்கியமானது. இத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவுக்குத் தமிழ்த் தலைவர்ளும் தமிழ் மக்களும் வர வேண்டுமேயொழிய, தேர்தலிலிருந்து விலகி நிற்பதும் தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்துவதும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான நலனுக்குக் குந்தகமான செயல்கள்.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் கட்டங்கட்டகமாகவே அடைய வேண்டிய சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கின்றதென்பதை முன்னரும் கூறியிருக்கின்றோம். இந்த அணுகுமுறைக்குச் சாதகமான நிலையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்து விட்டது. பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவர் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதும் பாராளுமன்றத் தேர்த லில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டுவதும் இதற்கு அத்தியாவசியமானவை. இனப் பிரச்சினைக்கான தீர்வை மனதிலிருத்தித் தமிழ் மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply