பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்பு: பிரிட்டன் பெண் எம்பியின் ஆச்சரியமான செயல்

பிரிட்டனியில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 29 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்பவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்பவர் இங்கிலாந்தில் இளநிலை பட்டம் முடித்துள்ளார். அதன் பின் இவர் அரசியலில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் எம்பி ஆக பதவி ஏற்றபோது பகவத்கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்று உள்ளார். மேலும் இது மெய்யான மாற்றத்திற்கான நேரம் என்றும் எனது பணி மிகவும் எளிதானதல்ல, ஆனால் நகரத்தை மாற்றுவதில் உறுதியாக உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கன்சர்வேட்டி கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள ஷிவானி ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இவர் தனது குடும்பத்தையும் ஹோட்டல் தொழிலையும் கவனித்து வரும் நிலையில் தற்போது எம்பி ஆகிவிட்டதால் நாட்டு மக்களையும் கவனிக்கும் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றும் தொழிலாளர்களுக்கு இருக்கும் கடுமையான சட்டங்களை குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றும் ஷிவானி ராஜா வாக்குறுதி கொடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply