கிளிநொச்சி நகரை ஒட்டி மீள்குடியேற்றம் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரை அண்டிய கிராமப் பகுதிகளிலும் தற்போது, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக்கரையோரப் பிரதேசமாகிய பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்கள் பலவற்றில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீளக்குடியமர்ந்துள்ள பகுதிகளில் பாடசாலைகள், ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த மாதம் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அங்கு மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் போக்குவரத்து வசதிக்காக கிளிநொச்சி நகரில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளை அலுவலகம் ஒன்றைத் திறந்து பேரூந்து போக்குவரத்துச் சேவைகளை இன்னும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுபற்றி கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ள மேலதிக தகவல்களை இன்றைய பி.பி.சி. தமிழோசையின் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply