வாஸ் குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கான மரண தண்டனை உறுதியானது
2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.
வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீண்ட பரிசீலனைக்கு பிறகு, உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒரு உப பொலிஸ் பரிசோதகரும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அடங்கியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply