வலிகாமம் வடக்கு மக்களின் மீள் குடியமர்வு; 9ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக, எதிர்வரும் 9ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதி மொழியை கோருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. வலி. வடக்கு மீள்குடியேற்றப் புனர் வாழ்வுக் குழுவால் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே இந்தத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், திருமதி பத்மினி சிதம்பரநாதன், மற்றும் வலி. வடக்கு சங்கத்தலைவர் ஆர்.சி. நடராஜா, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் உறுப்பினர் எஸ். சீவரட்ணம் உட்பட பெரும் எண்ணிக்கையான இடம்பெயர்ந்த மக்களும் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எதிர்வரும் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பான உறுதி மொழியினை வழங்கவேண்டும். மீள்குடியேற்றத்தின் ஆரம்பக்கட்டமாக வலி. வடக்கிலுள்ள மக்களின் விவசாய நிலங்களுக்குச் செல்ல அனுமதிப்பதுடன், தமது ஆலயங்களுக் குச் சென்று வழிபடுவதற்கும் அனுமதி வழங்கப்படவேண்டும். இந்தப்பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவ தற்கு மேற்படி மக்களின் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்ள வேண்டும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் வலி. வடக்கில் மீளக்குடியேற வேண்டிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருக்கின்றனர். இவர்களின் தொழில் வாய்ப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப் பட வேண்டும். மேற்படி தீர்மானங்களை மிக விரைவில் அரசஅதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற் குரிய நடவடிக்கைகளை வலி. வடக்கு புனர் வாழ்வுக்குழு மேற்கொண்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply