தேர்தல் சட்டத்தை மீறும் அரச நிறுவனங்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த அதிரடி நடவடிக்கை
தேர்தல் சட்டத்தை மீறும் அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட அதிகாரிகள் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அவற்றைத் தடுக்கக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நிலைமையை ஆய்வு செய்து கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட குழுக்கள் அனுப்பப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை அரச சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதனை ஒப்படைக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரச பதவிகளில் இருக்கும் போது அரசு வழங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அந்த பதவிகளை விட்டு விலகிய பிறகு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக பல புகார்கள் வந்துள்ளன.
அவ்வாறே பயன்படுத்தப்பட்டால் உடனடியாக அவற்றை மீளப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply