பங்களாதேஷில் 16 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைப்பு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா நாட்டைவிட்டு வெளியேறி 4 நாட்களுக்குப் பின்னர், 16 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை பங்களாதேஷ் அமைத்துள்ளது. குறித்த இடைக்கால அரசாங்கத்தை, நோபெல் பரிசு பெற்ற முகமது யூனூஸ் பொறுப்பேற்றுள்ளார். நாட்டு மக்கள் தன்மீது நம்பிக்கை வைக்கவேண்டுமென பதவியேற்பு நிகழ்வில் அவர் கேட்டுக்கொண்டார்.

பங்களாதேஷ் சுதந்திரம் பெற போராடியோரின் வம்சாவளியினருக்கு அரசாங்க வேலை ஒதுக்கும் நடைமுறையை எதிர்த்து தொடர்ச்சியாக பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல வாரங்களாக வன்முறை தொடர்ந்தது.

குறித்த போராட்டங்களை வழிநடத்தியோரில் இரண்டு மாணவர்களும் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். 26 வயதான அம்மாணவர்கள், வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை வரவேற்பதாய் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளன. ஜனநாயக மாற்றத்துக்கு ஆதரவளிக்க அவை உறுதிகூறின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply