20,000 கோடி ரூபாவைத் தாண்டும் பாதுகாப்புச் செலவினம்

இந்த ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவினம் 20,000 கோடி ரூபாவைத் தாண்டும் என அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்போது பாதுகாப்புச் செலவினத்திற்காக 16,650 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் உக்கிர மோதல்களினால் செலவுகள் அதிகரிதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மேலதிக தொகையை ஈடுசெய்யும் பொருட்டு நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை முன்வைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை மேலும் அதிகரிக்கக் கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply