அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு பெருந்தொகை டொலர் அபராதம்
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலாவுக்கு பெருந்தொகை டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தனது வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த பெண்ணுக்கு உரிய சம்பளம் மற்றும் விடுமுறையை வழங்காத குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக ஹிமாலி அருணதிலக்க பணியாற்றியுள்ளார்.அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும், அவருக்கு திட்டமிட்டபடி விடுமுறை வழங்கப்படவில்லை என்பதும் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோதச் செயலை உள்நாட்டலுவல்கள் திணைக்களம் அறிந்திருந்தும், அது தொடர்பான சட்டத் திணைக்களங்களுக்கு அறிவிக்கவில்லை என நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply