மக்களிடையே நல்லிணக்கம் வலுப்பெற தகவல் தொழில்நுட்பம் பயன்படவேண்டும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தகவல் தொழில்நுட்பமானது வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமில்லாது நாட்டு மக்களிடையே தொடர்பையும் நல்லிணக்கத் தையும் வலுப்படுத்தப் பயன்பட வேண்டு மென்பதே தமது எதிர்ப்பார்ப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற “இ – ஏசியா – 2009” மாநாட்டை உத்தி யோகபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரை யாற்றிய ஜனாதிபதி, இணையத்தளங்களின் இருளான பக்கங்கள் ஆசிய நாடுகளின் பெறுமதிமிக்க கலாசாரத்தைச் சீர்குலைப்பதாக அமைந்து விடக்கூடாது என்பதில் ஆசியத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
“இ-ஏசியா – 2009” மாநாடும் கண் காட்சியும் நேற்றுக் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகின.
ஆசிய பிராந்திய நாடுகளிலிருந்து இரு நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேற்படி மாநாட்டையும் கண்காட்சியையும் ஆரம் பித்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, மஹிந்த சிந்தனைக் கொள்கை மக்களிடம் பெருவரவேற்புப் பெற்றுள்ளதுடன் எமது தேர்தல் பிரசாரத்தில் இலங்கையில் தொடர்பாடல் சங்கமொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் தெரிவித்திருந்தோம். எதிர்காலத்தில் அச்சங்கம் ஸ்தாபிக்கப்படும் விரிவான விதத்தில் அதனைச் செயற்படுத் தவும் உத்தேசித்துள்ளோம்.
2009 ஆம் ஆண்டை நாம் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆண்டாகப் பிரகடனப் படுத்தியுள்ளோம். இதனை யொட்டியதாகவும் அதற்கு வலுச் சேர்ப்பதாகவும் “இ-ஆசியா” மாநாடு இலங் கையில் நடைபெறுவது வரவேற்கத்தக்கது.
இதுவரை காலமும் மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே உரிமையாக்கப் பட்டிருந்த ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை கிராமிய மட்டம்வரை கொண்டு செல்வதற்கான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
மூன்று தசாப்த காலங்களாக நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாகவிருந்த பயங்கரவாதம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து எமது மேற்படி குறிக்கோளை நாம் விரைவாக அடைவதற்கு உகந்த வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
எதிர்கால பொருளாதாரம் தொடர்பாடல் தொழில்நுட்பத்திலேயே தங்கியுள்ளது என்பது எமது நம்பிக்கை எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சமூக பொருளாதார அபிவிருத்தி முன்னேற் றமானது தகவல் தொழில் நுட்பத்திலேயே தங்கியுள்ளது.
அதனால் எமது சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். இதற்கிணங்கவே நாம் “இ-ஸ்ரீலங்கா” வோடு கைகோர்த்துச் செயற்பட முன்வந்துள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply