மாந்தை மேற்குப் பகுதிகளுக்கு பேரூந்து சேவைகள் அதிகரிப்பு
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படடிருக்கும் நிலையில் அப்பகுதிகளுக்கான பேரூந்து சேவைகள் தற்போது அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாந்தை மேற்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் மீள் குடியேற்ற நடவடிக்கையை அடுத்து மன்னாரில் இருந்து அடம்பன் பிரதேசத்திற்கான போக்கு வரத்து சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
வட பகுதியின் வன்னி பெருநிலப்பரப்பு உள்ளிட்ட மன்னாரின் மாந்தை மேற்கு மற்றும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் கடந்த பதினைந்து வருடங்களாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அப்பிரதேச வாசிகளுக்கான நேரடி அரச பேரூந்து போக்கு வரத்து சேவைகள் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் மன்னாரிலிருந்து மீளவும் மாந்தை பிரதேசத்திற்கான நேரடி போக்கு வரத்துச் சேவையினை இலங்கை போக்கு வரத்துச்சபையின் மன்னாh சாலை ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பேரூந்து சேவை மன்னாரிலிருந்து புறப்பட்டு உயிலங்குளம் ஊடாக அடம்பனை சென்றடைந்தது.
நாள் ஒன்றிற்கு இரண்டு சேவைகளாக இடம்பெற்று வந்த போக்கு வரத்துக்கள் தற்போது ஜந்து சேவைகளாக அதிகரிக்கப்பட்டிருப்பதோடு அச்சேவைகள் வட்டக்கண்டல் வரைக்கும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படகின்றது.
இதன்பிரகாரம் காலை 6.00மணியளவில் மனாரிலிருந்து புறப்படும் பேருந்து அங்கிருந்து 8.45 மணிக்கு மன்னாh நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கின்றது. அதேபோல் மன்னாரிலிருந்து 8.15க்கு புறப்பட்டு பின அங்கிருந்து 10.30க்கும்,
11.00 மணிக்கு பறப்படும் பேருந்து அங்கிருந்து பிற்பகல் 1.15க்கும்,
மாலை 3.00 மணிக்கு பறப்படும் பேருந்து அங்கிருந்து 5.15க்கும் புறப்பட்டு மன்னார் நகரை இரவு 7.00 மணியளவில் வந்தடைகின்றது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply