இலங்கையில் எட்டு ஆண்டுகளில் 26 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை: 833 பில்லியன் ரூபாய் வரியாக அறிவீடு

2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை நாட்டில் 26.46 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 833.23 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் வரியாக அறவிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய சமர்பித்த பதிலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அதிகளவான சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறித்த காலப்பகுதியில் 3.96 பில்லியன் சிகரெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டில் 2.30 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அந்த ஆண்டில் அரசாங்கம் அதிக வரி வருமானமாக 110.81 பில்லியன் ரூபாவைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் 3.79 பில்லியன் சிகரெட்டுகள் விற்கப்பட்டதாகவும், இதன் மூலம் வரி வருமானமாக 86.06 பில்லியன் ரூபா கிடைத்ததாகவும், 2017ஆம் ஆண்டில் 3.15 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதில் 88.88 பில்லியன் ரூபா வரி வருமானமாக கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2018 ஆம் ஆண்டில் 3.15 பில்லியன் சிகரெட்டுகள் விற்கப்பட்டதுடன், 92.94 பில்லியன் ரூபா வரி வருமானமாக கிடைத்துள்ளது.

2019ஆம் ஆண்டு 2.26 பில்லியன் சிகரெட்டுகள் விற்கப்பட்டதுடன் 87.55 பில்லியன் ரூபா வரி வருமானமாக கிடைத்துள்ளது.

2020ஆம் ஆண்டில் 2.29 பில்லியன் சிகரெட்டுகள் விற்கப்பட்டன.

இதன் மூலம் 90.23 பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதுடன், 2021ஆம் ஆண்டு 2.38 பில்லியன் சிகரெட்டுகள் விற்கப்பட்டதுடன், 90.70 பில்லியன் ரூபாய் வரிப்பணமாக கிடைத்துள்ளது.

2022ஆம் ஆண்டு 2.82 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு 81 பில்லியன் ரூபாய்கள் வரி வருமானமாக வசூலிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply