தலதா அத்துகோரள இன்னும் இராஜினாமா கடிதத்தை கையளிக்கவில்லையா : தகர்ந்துவிடும் சஜித்தின் எதிர்ப்பார்ப்புகள்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்னும் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பொது செயலாளரிடம் கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் வழங்காத காரணித்தினால், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குறித்த உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக அறிவித்தல் விடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் விருப்பு பட்டியலின் பிரகாரம் முன்னாள் உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான அடுத்ததாக தெரிவு செய்யப்படவுள்ளார்.
தமது பதவியிலிருந்து விலகுவதாக பதவி விலகல் கடிதம் வழங்கப்படும் வரை அந்தப் பதவி வெற்றிடமாகாது எனவும் விடுமுறை எதுவும் வழங்கப்படாமல் மூன்று மாதங்களுக்கு மேல் நாடாளுமன்றத்திற்கு சமுகமளிக்கவில்லை எனின் உறுப்பினர் பதவி அதுவாகவே நீக்கப்படும்.
அதன்படி, தலதா அத்துகோரள பதவி விலகல் கடிதத்தை வழங்கவில்லையாயின், அடுத்து வரவிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதானவுக்கு வாய்ப்பு பறிபோகும்.
எவ்வாறாயினும், தனக்கு நட்பாக இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்ளும் சஜித் பிரேமதாசவின் எதிர்ப்பார்ப்பு தகர்ந்துவிடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply