சுங்கத் திணைக்களம் வருமான வரலாற்றில் 1000 பில்லியன் ரூபா இலாபம் : சரத் நோனிஸ்
எந்தவொரு தரப்பிற்கும் அடிபணியாமல் சுயாதீனமாக செயற்பட இலங்கை சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகார சபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கியதன் மூலம் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் 08 மாதங்களில் 1000 பில்லியன் ரூபாவை சுங்க வருமானமாக ஈட்ட முடிந்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்காக சர்வதேச நாணய நிதியம் 1534 பில்லியன் ரூபாவை வருமான இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் 2024ஆம் ஆண்டின் 08 மாத நிறைவில் 1000 பில்லியன் வருமான இலக்கை எட்டியிருப்பதால், வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடுத்த 04 மாதங்களில் எட்ட முடியும் என சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு அதிக வருமானம் கிடைத்ததாகவும், அந்த வருடத்தின் மொத்த சுங்க வருமானம் 975 பில்லியன் ரூபாய் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரையில் மொத்த சுங்க வருமானத்தில் 25% – 30% வாகன இறக்குமதியில் பதிவு செய்யப்படும் என்றும், இந்த இரண்டு வருடங்களிலும் வாகனங்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் அந்த எண்ணிக்கை 6%இற்கும் குறைவாக இருப்பதாகவும் சரத் நோனிஸ் சுட்டிக்காட்டினார்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் தலைமைத்துவமும், சுதந்திரமாக செயலாற்ற கிடைத்தமையுமே இந்த இலக்கை அடைய வழி ஏற்பட்டதாகவும் சுங்கப் பணிப்பாளர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், சுங்கத் திணைக்களத்தில் பல சாதகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து அதிகாரிகளுக்கும் புதிய முறைகள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாட்டுகள் மூலம் அவர்களின் செயல்பாட்டை எளிதாக்க முடிந்தது. என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுங்கக் கட்டமைப்புக்குள் காணப்பட்ட மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும், கடத்தலை முற்றாக நிறுத்துவதற்கும் சுங்க ஊழியர்கள் வழங்கிய பங்களிப்பும் பெரும் உதவியாக அமைந்திருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாகச் செயல்பாடுகள், இடமாற்றங்கள் மற்றும் முழு சுங்க நிர்வாக நடைமுறைகளையும் முறையாகச் செயல்படுத்துவதற்கும், வருடாந்த செயல்திட்டத்தின் கீழ் முழு சுங்கத் துறையின் தரநிலை மாற்றங்களுடன் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply