ஊடகப் படுகொலைகளுக்கு முழுமையான விசாரணைகள் : அநுரகுமார
உதயன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உதயன் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைகள் தாக்குதல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் அநுரவிடம் சுடடிக்காட்டப்பட்டது. இதையடுத்தே ஊடகப் படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் மிக ஆழமான விசாரணைகள் நடத்தப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நீதி நிலைநாட்டப்படும் என்பதில் நான் மிக ஆழமான உறுதியுடன் உள்ளேன்.
இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும் நிச்சயமாக நீதியென்பது நிலைநாட்டப்பட்டே தீரும்.
அனைத்து வழக்குகள் தொடர்பிலும் நான் தீர்க்கமாக விசாரிப்பேன் என்றார்.
இதன்போது உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த அறிக்கையொன்று உதயனின் நிர்வாக இயக்குநர் சரவணபவனால் அநுரகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply