மலேசியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 400 குழந்தைகள் மீட்பு: இஸ்லாமிய மத ஆசிரியர்கள் உட்பட 170 பேர் கைது

மலேசியாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பராமரிப்பு இல்லங்களிலிருந்து அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது ஏராளமானவர்களைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் நெக்ரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையின்போது ஒன்று முதல் 17 வயதுக்குட்பட்ட 402 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் பொலிஸார் உள்ளிட்ட ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது இஸ்லாமிய மத ஆசிரியர்கள் மற்றும் நலன்புரி இல்லங்களில் பராமரிப்பாளர்கள் உட்பட சுமார் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பராமரிப்பாளர்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், மற்ற குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாகும் வரை சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை,” எனவும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிலர் கரண்டியால் சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு பொலிஸ் பயிற்சி மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு சுகாதார சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply