தொழிலுக்காக குவைத் சென்ற பெண்: வீட்டில் அடைத்து வைத்து, உணவு வழங்காமல் சித்ரவதை

இந்தியா ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா எனும் பெண், தொழிலுக்காக குவைத் (Kuwait) நாட்டுக்கு சென்றுள்ளார்.ஆனால், கவிதாவுக்கு அங்கு கூறியபடி தொழிலோ அல்லது சம்பளமோ கிடைக்கவில்லை.

தான் ஏமாற்றப்பட்டிருப்பதை புரிந்துகொண்ட கவிதா, இதுகுறித்து எஜமானியிடம் வினவியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, எஜமானி கவிதாவை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார். சரிவர உணவு கூட வழங்காமல் இருந்துள்ளார்.

இதுதொடர்பில் தன்னை இவ் வீட்டில் பணிக்கு அமர்த்திய இடைத் தரகருக்கு கூறலாம் என அவருக்கு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், அவர் கவிதாவை ப்ளொக் செய்துள்ளார்.

வேலைக்குச் சென்ற வீட்டில் தான் படும் துன்பங்களை தாங்க முடியாத கவிதா, தனக்கு நேரும் கொடுமைகளை காணொளியாக பதிவு செய்து ஆந்திர மாநில அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார்.

அக் காணொளியில் தன் கணவர் ஒரு மாற்றுத்திறனாளி எனவும் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் பிழைப்புத் தேடி குவைத்துக்கு வந்து சித்ரவதை அனுபவிப்பதாகவும், தன்னை விரைவில் இங்கிருந்து மீட்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply