வாகன இறக்குமதியால் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்படும் மாற்றம்: புதிய வரிகளை விதிக்க தயாராகும் அரசாங்கம்
இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வரி விதிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முற்றாக நீக்குவதன் மூலம், அரசாங்கத்திற்கான வருடாந்த கையிருப்பு ஏறக்குறைய தொள்ளாயிரத்து மில்லியன் டொலர்கள் குறைக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிலைமையை கட்டுப்படுத்தவும், அரச வருவாயை அதிகரிக்கவும் புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பல கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்யப்படும்.
வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply