மன்னாரில் முழு ஊரடங்கு : பொலிஸாரால் எச்சரிக்கப்பட்ட மக்கள்
நாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென காவல்துறையால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதுடன் உரிய அனுமதியின்றி நடமாடும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply