லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதல்: 492 பேர் உயிரிழப்பு
லெபனானில் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
2006 போருக்குப் பிறகு ஆயுதக் குழு கட்டமைத்த உள்கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் 1,300 ஹெஸ்பொல்லா இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வடக்கு இஸ்ரேலில் ஏவியது என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பும் முழுக்க முழுக்கப் போரை நோக்கிச் சுழன்று வருவதால், உலக வல்லரசுகள் நிதானத்தை வலியுறுத்துகின்றன.
இறந்தவர்களில் 35 குழந்தைகள் மற்றும் 58 பெண்கள் அடங்குவதாகவும், 1,645 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் அல்லது போராளிகள் என்பது தெரிவிக்கப்படவில்லை.
போர் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அதிகரித்து வரும் பதற்ற நிலைமை குறித்து கவலை தெரிவித்ததோடு, லெபனான் “மற்றொரு காசாவாக மாறுவதை” விரும்பவில்லை என்றார்.
தாம் ஹமாஸுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை ஓயப் போவதில்லை எனவும் ஹெஸ்பொல்லாஹ் தெரிவித்துள்ளது.
இரண்டு குழுக்களும் ஈரானால் ஆதரிக்கப்படுவதுடன், இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்புகளாக தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வளர்ந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் மத்திய கிழக்கிற்கு “சிறிய எண்ணிக்கையிலான” கூடுதல் அமெரிக்க துருப்புக்களை அனுப்புவதாக பென்டகன் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply