சோமவன்சவின் கூற்று சிறுபிள்ளைத்தனம்
ஜீ.எஸ்.பி. சலுகை என்பது தலைவர்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தமான நிலைமையைக் கருத்தில் எடுத்தே தீர்மானிக்கப்படும். இந்த வகையில் ஜீ. எஸ். பி. சலுகை கிடைக்குமென்ற நம்பிக்கை உண்டு. இது தொடர்பாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறிய கூற்று சிறுபிள்ளைத் தனமானதென அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். ஜீ. எஸ். பி. பிளஸ் சலுகை அரசியலல்ல. நாட்டின் கிராமத்து மூலைகளில் கஷ்டமான ஜீவனம் நடத்தும் பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் இது என்பதால் இவ்விடயத்தில் பொறுப்பின்றி எவரும் கருத்துக்களை வெளியிடக்கூடாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் ஜீ. எஸ். பி. பிளஸ் சலுகை எமக்குக் கிடைக்குமென்பதில் எவரும் நம்பிக்கையுண்டு. இது தொடர்பில் ஐரோப்பிய யூனியனுடன் தொடர்ச்சியாக அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், விரைவில் அமைச்சரவைக் கூடும் போது இதுபற்றி தீர்க்கமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அத்தீர்மானம் பற்றி ஐரோப்பிய யூனியனுக்கு அறிவிக்கவுள் ளோம்.
மீள்குடியேற்ற நடவடிக்கையில் அரசாங்கம் காட்டிவரும் அதீத கவனத்தைக் கருத்திற்கொண்டு மேற்படி சலுகையை வழங்க ஐரோப்பிய யூனியன் முன்வரும் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு உண்டு.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply