இதையே தான் கோட்டாவும் செய்தார்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களை ஒத்தவை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், அவரும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 993 வாகனங்களை ஏனைய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளித்தார். மதிய உணவு இடைவேளைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் குறைத்து, பால் தேநீருக்கு பதிலாக சாதாரண தேநீர் வழங்கி, ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக சிறிய வீடொன்றில் தங்கியிருந்தார் என முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டினார்.

மக்களின் அதிக எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும், அவ்வாறான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது கடினம் எனத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இதுவே நேர்ந்தது எனவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply