ஜனநாயகம், ஊடக சுதந்திரம் தொடர்பில் ரணில் பாரிய பிரசாரம் செய்து வருகின்ற போதிலும் கட்சிக்குள் எவ்வித ஜனநாயகமும் கிடையாது

ஜனநாயகம், ஊடக சுதந்திரம் தொடர்பில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பெருமெடுப்பில் பிரசாரங்கள் செய்து வருகின்ற போதிலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எவ்வித ஜனநாயகமும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எஸ். பி. திஸாநாயக்க அல்லது வேறொரு பொருத்தமான ஓர் வேட்பாளர் நியமிக்கப்பட வேண்டும். 47 லட்ச வாக்காளர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக வாக்களித்துள்ள நிலையில் ஏன் பொது வேட்பாளர் ஒருவருக்கு கட்சி ஆதரவு வழங்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

17 சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகிய போது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தரப்பினர் தமக்கு எதிராக செய்து வரும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை.

ஜனநாயகம், ஊடக சுதந்திரம் தொடர்பில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பெருமெடுப்பில் பிரசாரங்கள் செய்து வருகின்ற போதிலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எவ்வித ஜனநாயகமும் கிடையாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply