நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் இரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று (30) அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதியின் தேர்தல் கொள்கை பிரகடனத்துக்கமையை இந்த அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலுக்கான மொத்த செலவாக 11 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply