IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர்.
அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அதன் கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்த விவாதம் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply