உக்ரெய்ன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: கமலா ஹாரிஸ் உறுதி

உக்ரெய்ன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரெய்ன் தற்காப்பு நடவடிக்கைகளை தாங்கள் ஆதரிப்பதாகவும் உக்ரெய்ன் ஆதரிப்பதில் பெருமை கொள்வதாகவும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசுகையில் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட கமலா ஹாரிஸ்,

“ஐ.நா மற்றும் உக்ரெய்ன் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப் இப்போது ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்ய ஜனாதிபதி புடின், தற்போது கீவ் நகரில் இருந்திருப்பார்.

இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரெய்னின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

உக்ரெய்னை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உக்ரெய்ன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை.

அமெரிக்க மக்களுக்கும் இஸ்ரேலிய மக்களுக்கும் இடையிலான ஒரு நல்ல நட்புறவு உள்ளது.

இஸ்ரேல் தலைமையில் இராஜதந்திர ரீதியாக நாங்கள் செய்யும் பணி, நம் நாட்டு கொள்கைகளை தெளிவுபடுத்துவதற்கான ஒரு தொடர் முயற்சி.

என்னுடைய பொருளாதார திட்டங்கள் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும். எனினும், ட்ரம்ப்பினுடைய திட்டங்கள் அதை பலவீனப்படுத்திவிடும்.” என தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணலுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், எனினும் அவர் மறுத்துவிட்டதாகவும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply