மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் திருகோணமலை மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் JICA திட்டத்தின் பணிப்பாளர், திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் இத்திட்டத்திலுள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கும் போது பெண்களையும் விகிதாசார அடிப்படையில் சேர்க்க வேண்டுமெனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

இதன்போது மாவட்ட இணைப்பாளர் சமூக சேவை உத்தியோகத்தர், மாவட்ட இணைப்பாளர் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை திணைக்களத்தின் சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply