கூட்டமைப்பை பிளவுபடுத்த மாவையும் ஸ்ரீகாந்தாவும் முயற்சி: தமிழ்நெற்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜாவும், ஸ்ரீகாந்தாவும் அக்கட்சியைப் பிளவு படுத்தும் செயல்களில் ஆளாளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்துள்ள செய்திகள் கூறுவதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.

 கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்த ஸ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இன்னொரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அச்சந்திப்பின் பின்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் முதல் கட்டத்தில் வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 4500 மக்களை மீளக்குடியமர்த்த அனுமதிப்பது குறித்து பசில் ராஜபக்ஷ தம்முடன் கலந்துரையாடியதாக ஸ்ரீகாந்தா கூறினார்.

இதேவேளை வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும்படி வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தைத் தாம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அனுப்பியுள்ளதாக மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்குக் கொடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் இவ்விடயம் குறித்து பிற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவுமே கூறாமல் மௌனம் காத்து வருவதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

இப்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலமை குறித்து கருத்துக் கூறியுள்ள அரசியல் அவதானிகள், கட்சியை பிளவு படுத்தும் விதத்தில் அவர்கள் செயல் அமைவது எல்லாம் சுயநல நோக்கத்தோடு மட்டுமே நடப்பதாகக் கூறுகின்றனர். தனது தமிழரசுக் கட்சி உயிர்கொடுத்து அதை பாராளுமன்றத்துக்குக் கொண்டுசெல்ல மாவை சேனாதிராஜா பாடுபடும் இவ்வேளையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை தலைமையேற்று நடத்தும் ஸ்ரீகாந்தாவோ தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியை வெளியேற்றிவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பதவியைக் கைப்பற்றத் துடிக்கிறார் என அவதானிகள் மேலும் கூறியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த போக்கினால் பெரிதும் மனக்குழப்பத்துக்கு யாழ் மாவட்ட மக்கள் உள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில் எந்த வேட்பாளருக்கு தமிழர்கள் ஆதரவு வழங்குவது என்பதில் மக்கள் இன்னும் தெளிவாகாத நிலையில் இவ்வாறான சுயநல அரசியல் வாதிகளின் போக்கு மக்களை மேலும் கலங்கடித்துள்ளதாக தமிழ்நெற் மேலும் அச்செய்தியில் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply