ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 347 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகளுக்கு கேள்வி நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய அரசாங்கமும் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை காரணமாக இவ்வாறு கிராக்கி நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு கூடுதல் கடன் பெறுகையே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது இணக்கப்பாடு கடன் ஸ்திரத்தன்மை என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பிணை முறிகள் மற்றும் திறைசேரி உண்டில்களை விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும். ஜனாதிபதி அநுரகுமார பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கையின் உள்நாட்டு சந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்தக் கடன் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply