இலங்கையில் வளர்ச்சியை பதிவுசெய்துள்ள கைத்தொழில் உற்பத்தி
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 1.2 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023 ஓகஸ்டில் 90.2 ஆக இருந்த கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண், இந்த ஆண்டு ஓகஸ்டில் 91.3 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இதில், உணவு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான உற்பத்திகளில் வீழ்ச்சி காணப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு சற்று குறைந்துள்ளது.
ஜூலை மாதத்தில் 16,373 ரூபாவாக இருந்த வறுமைக் கோடு ஓகஸ்ட் மாதத்தில் 16,152 ரூபாவாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply