ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸில் விமானிகள் மோதல்
2024 செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி வந்த யுஎல் 607 விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
சிட்டினியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த குறித்த விமானத்தில், விமானிகள் கடும் வாய்த் தகராறில் ஈடுபட்டதாகவும், அவர்களில் ஒருவர் ஏர்பஸ் ஏ330 விமானி அறையிலிருந்து பூட்டப்பட்டதாகவும் விமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் யுஎல் 607 விமானத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் திங்கட் கிழமை (14) ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது. மேலும் விமானத்தின் கேப்டன் பின்னர் தரையிறக்கப்பட்டதாகக் கூறினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விமான நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கிறது. மேலும் விசாரணையின் முடிவு நிலுவையில் இருக்கும் நிலையில் கேப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்குதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளது என்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply