சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர் கொலை : 2 சிறுவர்கள் பிடிபட்டனர்

கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பதின்ம வயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்பிலியான பிரதேசத்தில் சிறுவர் இல்லம் ஒன்றின் பாதுகாவலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் 16 மற்றும் 17 வயதுடைய பதின்ம இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாதுகாவரை கொலையை செய்துவிட்டு, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை திருடி, சடலத்தை பெல்லன்வில ஏரியில் வீச குறித்த அவர்கள் திட்டமிட்டனர்.

எனினும் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் அவ்விடத்திற்கு வந்தமையால் முயற்சி தோல்வியடைந்தது.

அலுபோமுல்ல பபுனுகம பிரதேசத்தில் வசிக்கும் பெபிலியான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய 80 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த வேளையில் காவலாளி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 வயதுடைய பிரதான சந்தேகநபர் அதே சிறுவர் இல்லத்தில் வாழும் நிலையில் 16 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் இந்தக் குற்ற செயலுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஏனைய சிறுவர்களை தனி அறையில் அடைத்து வைத்திருந்த பிரதான சந்தேகநபர், தனது அறையின் ஜன்னல் ஊடாக வெளியே வந்து பாதுகாவலரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply